தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் அதிகமாகவே உள்ளது. ஆனால் கடந்த ஒருவாரமாக யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தும், குறைந்தும் வந்தது. இதனால் பொதுமக்கள்/ நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 வரை விலை குறைந்துள்ளது. இந்த விலை இறக்கம் பொதுமக்களிடையே தங்கத்தில் முதலீடு செய்ய சிறிது நம்பிக்கையினை வழங்கியுள்ளது.
சவரனுக்கு ரூ.240 குறைவு:
சென்னையில் நேற்றைய 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,675 ஆக விற்ற நிலையில் இன்று ரூ.30 குறைந்து ரூ.5,645 ஆக விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.240 வரை குறைந்து ரூ.45,160 ஆகவும் விற்பனையாகிறது.
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக திகழ்கிறது. மேற்குறிப்பிட்ட விலை சென்னையின் சந்தை நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியின் விலை:
அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம். அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, வெள்ளியின் விலை அதிகரிக்கிறது.
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 0.60 காசுகள் குறைந்து ரூ.78 எனவும், கிலோ ஒன்றிற்கு 600 ரூபாய் வரை விலை குறைந்து ரூ.78,000 ஆகவும் விற்பனையாகிறது.
எதிர்பாராத இந்த விலை இறக்கம், பொருளாதார அளவிலான நடுத்தர மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. இன்னும் ஒரிரு வாரத்தில் சம்பளம் பெறும் நிலையில் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்திருப்பவர்களின் கனவில் கொஞ்சம் ஒளி தெரிய ஆரம்பித்துள்ளது எனலாம்.
pic courtesy: unsplash
மேலும் காண்க:
டிரைவர் இல்லாமல் இயங்கும் டிராக்டர்- அசத்திய தெலுங்கானா பல்கலைக்கழகம்