தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,950 ஆகவும், சவரன், ரூ.39,600 ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.4,945 ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் சரிந்து, ரூ.39 ஆயிரத்து 560 ஆகவும் குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,945க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாகக் குறைந்துள்ளது, நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகை வாங்க நினைப்போருக்கும்சற்று ஆறுதல் அளித்துள்ளது.
கடந்த கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,144 அதிகரித்தது, இந்த வாரத்திலும் தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் உயர்ந்த நிலையில் இரு நாட்களாகச் சரிந்தது.
சர்வதேச அளவில் ஏற்பட்டும் உறுதியற்ற சூழல், உக்ரைன் ரஷ்யா போர் மீண்டும் மூளுமா, பெடரல் வங்கியின் அறிவிப்பு போன்ற சர்வதேச காரணிகளால் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.68.50 ஆக இருந்தநிலையில் 20 பைசா சரிந்து, ரூ.67.00ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.67,000 ஆக குறைந்துள்ளது.
மேலும் படிக்க: