கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலையில் உயர்ந்தது, இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறைந்திருக்கிறது. இன்று தங்கத்தின் விலை நிலவரம்.
ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை என்ற பழைய சொலவடையுள்ளது. அந்த வகையில், தங்க விலை ஒரு நாள் குறைந்தால், அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்ந்துவிடுகிறது. இதனால் நகை வாங்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். நேற்று விலைச் சரிவு இருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சென்னையில் இன்று (பிப்ரவரி 4, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,536க்கு விற்பனையாகிறது. மேலும் எட்டு கிராம் தங்கம், 48 ரூபாய் குறைந்து 36,288 ரூபாய்க்கு விற்பனையாகிறது. குறைந்து வந்த தங்கத்தின் விலையில் திடீரென விலை உயர்வு ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்திருக்கிறது.
வெள்ளியில் விலையில் பெரிய மாற்றம் இல்லை, வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய்க்கும், ஒரு கிலோ 61,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம், மக்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். விவசாயிகளும் தங்கம் வைத்து கடன் பெறுவதை எளிதென நம்புகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி சிறு தொழில் முதல் பெருந் தொழில் செய்வோர் வரை அனைவரும் தங்கத்தில் செய்யும் முதலீடு மற்றும் தங்கத்தின் மீது வாங்கும் கடன் அனைத்தையும் எளிது என நம்புகின்றனர். ஆகவே இதன் விற்பனை இன்றளவும் இன்றியமையாதது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
செய்தி: 10 ரூபாய்க்கு மதிய உணவு, நடிகர் கார்த்தியின் ஏற்பாடு! எங்கே?
வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய (Find out the price of gold at home)
வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.
மேலும் படிக்க: ஆண்டுக்கு, ஒரு LPG சிலிண்டராவது இலவசமாக வேண்டுமா? இதை செய்யுங்கள்!