சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்குத் தங்கம் வாங்க முன்வருபவர்களுக்கு இந்த சரிவு நல்ல லாபத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் என்பது பெண்களின் வாழ்க்கையை நிர்மாணிப்பதாகக் கருதினால், அவர்களுக்குப் போடும் தங்க நகைகளின் பங்கும் முக்கியத்துவம் பெறுகிறது. சீதனமாகக் கொடுக்கப்படும் தங்கத்தின் அளவுக்கு ஏற்பவே, நல்ல வருமானம் ஈட்டும் மணமகன் கிடைப்பான் என்பதுதான் உண்மை. இதுதான் இன்றைய வாழ்க்கையின் எதார்த்தம்.
ஆனால் சர்வதேச சந்தையின் மாற்றத்திற்கு ஏற்ப அதிகரித்து வரும் தங்கம், பெண் பிள்ளைகளைப் பெற்றிருப்போருக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்திவிடுகிறது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரகாலமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.472 வீதம் குறைந்திருக்கிறது. அதாவது கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,787ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 38,296 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலை ஒரு கிராம் 64 ரூபாய் 80 பைசாவாக விற்பனையாகிறது.நேற்று ஒரு சவரன் தங்கம் 38,768 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 4,846 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரத்தில் கடந்த 3ம் தேதி ஒரு கிராம் தங்கம் 4,796 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 38,368 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை வைத்திருப்பவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
மேலும் படிக்க...
பெண்களுக்கு இனி ஓட்டுனர் உரிமம் கிடையாது - அரசு அதிரடி உத்தரவு!
டீக்கடைகளில் நீங்கள் அருந்தும் தேநீர் தரமானதா? கண்டுபிடிப்பது எப்படி?