தமிழகத்தில் தங்கம் விலை மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு பின் இப்போது மீண்டும் இந்த உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை கடந்த சில தினங்களாகவே மெல்ல மெல்ல உயர்ந்து வந்தது.
தங்கம் விலை (Gold Rate)
இன்று(ஏப்ரல் 14) சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9 உயர்ந்து ரூ.5,005க்கும், சவரன் ரூ.72 உயர்ந்து ரூ.40,040க்கும் விற்பனையாகிறது.
இதன் மூலம் கடந்த மார்ச் 7ம் தேதிக்கு பின் தங்கம் விலை மீண்டும் ரூ.40 ஆயிரம் எனும் நிலையை எட்டி உள்ளது. 10 கிராம் கொண்ட 24 காரட் தங்கம் விலை ரூ.90 உயர்ந்து ரூ.54,040க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.74.40க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்திருப்பதன் எதிரொலியாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
நகைக்கடன் தள்ளுபடியில் புதிய நிபந்தனைகள்: ஏமாற்றத்தில் மக்கள்!
பென்சன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி: அரசின் சூப்பர் திட்டம்!