பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 February, 2022 5:03 PM IST
Gold prices rise for third day in a row! What is the price situation?

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்துக் காணப்பட்டு வருகிறது. இன்று கணிசமாகவே தங்க விலை உயர்ந்திருக்கிறது, இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்ன என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை என்ற பழைய சொலவடையுள்ளது. அந்த வகையில், தங்க விலை ஒரு நாள் குறைந்தால், அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்ந்துவிடுகிறது. இதனால் நகை வாங்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் இன்று (பிப்ரவரி 19, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,733 ஆக விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ரூ. 5,123 ஆக உள்ளது. 8 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் 8 ரூபாய் உயர்ந்து ரூ. 37,568 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

நேற்று 5,122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் (24 கேரட்) தங்கம் இன்று 5,163 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரம், நேற்று 37,832 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் (22 கேரட்) தங்கம் 32 ரூபாய் உயர்ந்து 37,864 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரம் பிப்ரவரி 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் மட்டுமே தங்கம் விலை குறைந்து காணப்பட்டது, அடுத்த நாள் பிப்ரவரி 15ஆம் தேதி கணிசமாக கூடிய தங்க விலை, மறுநாள் பிப்ரவரி 16ஆம் தேதி குறைந்து காணப்பட்டது. பிப்ரவரி 17 முதல் ஏற தொடங்கிய தங்க விலை, இன்று ஏற்றத்துடனே காணப்படுகிறது.

கடந்த வாரத்தில் 10 கிராம் தங்கம் விலை நிலவரம் (Last week's 10 gram gold price situation)

Feb 19, 2022: 22 Carat ₹47,330 ( 40 )  (24 Carat)₹51,630  ( 40 )
Feb 18, 2022: 22 Carat ₹47,290 (190 ) (24 Carat) ₹51,590 (210 )
Feb 17, 2022: 22 Carat ₹47,100 (450)  (24 Carat) ₹51,380 (530 )
Feb 16, 2022: 22 Carat ₹46,650 (-310) (24 Carat) ₹50,850 (-380)
Feb 15, 2022: 22 Carat ₹46,960 ( 10 )  (24 Carat) ₹51,230 ( 10 )
Feb 14, 2022: 22 Carat ₹46,950 (-200 )(24 Carat) ₹51,220 (-220)

தங்கம், மக்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். விவசாயிகளும் தங்கம் வைத்து கடன் பெறுவதை எளிதென நம்புகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி சிறு தொழில் முதல் பெருந் தொழில் செய்வோர் வரை அனைவரும் தங்கத்தில் செய்யும் முதலீடு மற்றும் தங்கத்தின் மீது வாங்கும் கடன் அனைத்தையும் எளிது என நம்புகின்றனர். ஆகவே இதன் விற்பனை இன்றளவும் இன்றியமையாதது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

மேலும் படிக்க:

இந்தியாவில் வளர்ந்து வரும் ட்ரோன் சந்தைக்கு, பிரதமர் ஆதரவு உறுதி!

PF கணக்கு வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை! இந்த தவறுகளை தவிர்க்கவும்!

English Summary: Gold prices rise for third day in a row! What is the price situation?
Published on: 19 February 2022, 05:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now