News

Monday, 13 June 2022 12:01 PM , by: Elavarse Sivakumar

சென்னையில், தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்துள்ளது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையில் தற்போது மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.

சர்வதேசப் போர்

உக்ரைன்-ரஷ்யப் போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. போர் 100 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், போர் பதற்றம் காரணமாக, பெரும்பாலும் விலை அதிகரித்து வந்தது.

ரூ.480

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நிலவிய அதே விலை இன்று நீடிக்கிறது. ஒரேநாளில் சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த 10ம் தேதி 4,775 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 4,835 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல், 10ம் தேதி 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று 38,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.முன்னதாக கடந்த 6ம் ஒரு சவரன் தங்கம், 38,680ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 4,835 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமண சீசனில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தங்கம் வாங்குவோரைக் கலக்கமடையச் செய்துள்ளது. தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த வாடிக்கையாளர்களும், முதலீட்டாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க...

லட்சாதிபதியாக விருப்பமா? சீக்ரெட் விஷயம் இதோ!

ஒரு ஆப்பிள்… இத்தனை நன்மைகளா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)