கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்துக் காணப்பட்டு வருகிறது. இன்று கணிசமாகவே தங்க விலை உயர்ந்திருக்கிறது, இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்ன என்று அறிந்துக்கொள்ளுங்கள்.
ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை என்ற பழைய சொலவடையுள்ளது. அந்த வகையில், தங்க விலை ஒரு நாள் குறைந்தால், அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்ந்துவிடுகிறது. இதனால் நகை வாங்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சென்னையில் இன்று (பிப்ரவரி 22, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,762 ஆக விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ரூ. 5,200 ஆக உள்ளது. 8 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் 280 ரூபாய் உயர்ந்து ரூ. 37,816 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
நேற்று 5,157 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் (24 கேரட்) தங்கம் இன்று 5,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரம், நேற்று 41,256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் (24 கேரட்) தங்கம் 344 ரூபாய் உயர்ந்து 41,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த வாரத்தின் 10 கிராம் தங்கம் விலை நிலவரம்
Feb 20, 2022 22 Carat ₹47,320 (-10) (24 Carat) ₹51,620 ( -10 )
Feb 19, 2022 22 Carat ₹47,330 ( 40) (24 Carat) ₹51,630 ( 40 )
Feb 18, 2022 22 Carat ₹47,290 (190) (24 Carat) ₹51,590 ( 210 )
Feb 17, 2022 22 Carat ₹47,100 (450) (24 Carat) ₹51,380 ( 530 )
Feb 16, 2022 22 Carat ₹46,650 (-310)(24 Carat) ₹50,850( -380 )
Feb 15, 2022 22 Carat ₹46,960 ( 10 ) (24 Carat) ₹51,230 ( 10 )
Feb 14, 2022 22 Carat ₹46,950 (-200) (24 Carat) ₹51,220 (-220)
தங்கம், மக்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். விவசாயிகளும் தங்கம் வைத்து கடன் பெறுவதை எளிதென நம்புகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி சிறு தொழில் முதல் பெருந் தொழில் செய்வோர் வரை அனைவரும் தங்கத்தில் செய்யும் முதலீடு மற்றும் தங்கத்தின் மீது வாங்கும் கடன் அனைத்தையும் எளிது என நம்புகின்றனர். ஆகவே இதன் விற்பனை இன்றளவும் இன்றியமையாதது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)
வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.
மேலும் படிக்க:
7th Pay Commission குட் நியூஸ்: 34% டி ஏ பற்றிய முக்கிய அப்டேட் அறிந்திடுங்கள்
இதல்லவோ ஆஃபர்: மளிகை பொருள் வாங்கினால், வலிமை படத்தின் டிக்கேட் ஃபிரீ