சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 3 September, 2024 4:11 PM IST
pic : pexels (EqualStock IN)

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு வேளாண் சார்ந்த 7 முக்கிய திட்டங்களுக்கு ரூ.13,966 கோடி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமாக பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், வேளாண் மற்றும் உழவர் நலன் துறை சார்ந்த அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பேற்றது முதல் கூடுதல் கவனம் வேளாண் துறை மீது செலுத்தப்பட்டு வருகிறது.

7 திட்டங்கள் என்ன?

இந்நிலையில், டிஜிட்டல் விவசாயம், பயிர் அறிவியல், வேளாண் சார்ந்த கல்வி, கால்நடை சுகாதாரம், தோட்டக்கலை மேம்பாடு, வேளாண் அறிவியல் மையங்களை வலுப்படுத்துதல் மற்றும் இயற்கை வள மேலாண்மை தொடர்பான ஏழு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் மொத்தம் ரூ.13,966 கோடி செலவில் ஏழு திட்டங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

டிஜிட்டல் வேளாண்மை பணி: டிஜிட்டல் தொழில்நுட்பம் பெருகி வரும் சூழ்நிலையில், விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடுகளை உட்புகுத்தி விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் வேளாண்மை மிஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான மொத்த செலவினம் ரூபாய் 2,817 கோடி ஆகும்.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர் அறிவியல்:  இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.3,979 கோடி என நிர்ணயிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பருவநிலைக்கு ஏற்றவாறு விவசாயிகளை தயார்படுத்தி 2047-க்குள் தன்னிறைவு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல்: மொத்தம் ரூ.2,291 கோடி செலவில், வேளாண் படிப்பு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தற்போதைய வேளாண் துறை சார்ந்த சவால்களுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி: இத்திட்டமானது மொத்தம் ரூ.1,702 கோடி செலவில், கால்நடைகள் மற்றும் பால்பண்ணை மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தோட்டக்கலைத் துறையின் நிலையான வளர்ச்சி: இத்திட்டமானது மொத்தம் 860 கோடி ரூபாய் செலவில், தோட்டக்கலை செயல்பாடுகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

வேளாண் அறிவியல் மையங்களை வலுப்படுத்துதல்: விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டறிவதில் வேளாண் அறிவியல் மையங்களின் பணி அளப்பரியது. அந்த வகையில் தொழில் நுட்ப ரீதியாக நாட்டிலுள்ள வேளாண் அறிவியல் மையங்களை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.1,202 கோடி செலவீடு மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இயற்கை வள மேலாண்மை: ரூ.1,115 கோடி செலவில் இயற்கை வள மேலாண்மை தொடர்பான பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Read more:

உயிர் உரங்களை எப்படி சரியாக பயன்படுத்துவது?

இயற்கையின் அற்புத கொடை "பூஞ்சைகள்” - ஏன் தெரியுமா?

English Summary: Good news Cabinet approves 7 projects for farmers at Rs 13966 crore
Published on: 03 September 2024, 04:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now