News

Monday, 18 November 2019 02:57 PM

உள்நாட்டு மீனவா்கள் பயன்பெறும் வகையில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள்களை மானிய விலையில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. நிகழாண்டிற்கான மானிய விவரங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. (2019-20) ஆம் ஆண்டிற்கான மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வாங்க 40% மானியம் வழங்கப்பட உள்ளது. பயன் பெற விரும்புவோர் தருமபுரி மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

மானியம் பெற தகுதியானவர்கள்

  • உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்களாகவும், முழுநேரம்  மீன்பிடிப்பு தொழில் ஈடுபட்டவராகவும் இருக்க வேண்டும். அதே போன்று பங்கு முறையில் மீன் பிடிக்கும் மீனவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • கடந்த ஆண்டுகளில் மீன்பிடி வலைகள் அல்லது பரிசல்களுக்காக அரசின் எவ்வித மானியத் தொகை பெற்றிருக்கக் கூடாது. மேலும் பயனாளிகளின் சொத்து உருவாக்கம் எல்லாம் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களில் ஒருவருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
  • பயனாளிகளுக்கு 20 கிலோ எடையுள்ள நைலான் மீன்பிடி வலைகள் வாங்குவதற்கு அதிகபட்சமாக 40% அதாவது ரூ.8,000 வழங்கப்படும். பரிசல்கள் வாங்குவதற்கும் மானியம்  வழங்கப் படும்.
  • பழங்குடியினம் மாற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினத்தை சேர்ந்த மீனவ பயனாளிகளுக்கு 24% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விரும்பமும் உள்ள உள்நாட்டு மீனவா்கள் ஒரு வாரத்திற்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடா்புகொள்ளலாம்.

தருமபுரி மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம்,
ராமசாமி தெரு,
ஒட்டப்பட்டி,
தருமபுரி-636 705
04342-232311

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)