பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 September, 2022 8:00 AM IST
Free Ration Extension

எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலவச ரேஷன் (Free Ration)

2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதற்காக பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு மாதம் தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் இலவசப் பொருட்களுக்கு மேல் கூடுதலாக இந்த 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் முதலில் 2020 ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2020 நவம்பர் வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2021 மே, ஜூன் மாதங்களில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2021 நவம்பர் வரை இலவச ரேஷன் திட்டம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் ஐந்தாவது முறையாக 2022 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் இரு தினங்களில் இத்திட்டம் முடிவுக்கு வர இருந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க

ரேஷன் கடையில் இனிமேல் இதனை செய்யக் கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

அரிசி ஏற்றுமதி செய்ய ஒரே ஒரு கன்டிஷன்: மத்திய அரசு அறிவிப்பு!

English Summary: Good News for Ration Card Holders: Free Ration Scheme Extension!
Published on: 29 September 2022, 08:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now