News

Thursday, 03 November 2022 07:27 AM , by: R. Balakrishnan

Pongal Gift

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்து, அதற்கான பணிகளை முடுக்கிவிட்டு இருந்தார்.

பொங்கல் பரிசு (Pongal Gift)

சுமார் 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து ரே‌ஷன் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. முன்னதாக ரே‌ஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டு எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படுகிறது? என அறிவிக்கப்பட்டு அதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது.

அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பச்சரிசி- 1 கிலோ, வெல்லம்- 1 கிலோ, முந்திரி- 50 கிராம், திராட்சை- 50 கிராம், ஏலக்காய்- 10 கிராம், பாசி பருப்பு- 500 கிராம், ஆவின் நெய் - 100 கிராம், மஞ்சள் தூள் - 100 கிராம், மிளகாய் தூள் - 100 கிராம், மல்லி தூள் - 100 கிராம் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், இவற்றுடன் கடுகு - 100 கிராம், சீரகம்- 100 கிராம், மிளகு - 50 கிராம், புளி- 200 கிராம், கடலைப் பருப்பு- 250 கிராம், உளுத்தம் பருப்பு- 500 கிராம், ரவை- 1, கோதுமை - 1 கிலோ, உப்பு - 500 கிராம், துணி பை ஒன்று மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. அந்தவகையில் நடப்பாண்டும், இது போன்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டதாகவும், அதற்கு அரசு உயரதிகாரிகள் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதாவது கடந்த முறை பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூக வலைதளவாசிகளும் கிழி கிழியென கிழித்து தொங்கவிட்டனர். அதுமட்டும் இல்லாமல் வெல்லம் உருகிய நிலையில், புளியில் பூச்சி என, தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக தமிழகம் முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுந்து அரசுக்கும் கெட்ட பெயரே வந்ததாக அதிகாரிகள் விளக்கமாக கூறியுள்ளனர்.

ரூ.1000

இந்நிலையில், இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஆரம்பத்தில் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவாக மதிப்பிடப்படும் என்று, கருதிய அதிகாரிகள் எந்த பரிசு பொருளும் தராமல், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 பணம் தர முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், முன்கூட்டியே பணியை முடுக்கி விட, கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் ப்ளான் அரங்கேறி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தானியங்கள் நிலுவை: மத்திய அரசின் ஒதுக்கீடு எங்கே போனது?

அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்: நிதித்துறை அதிரடி உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)