மத்திய அரசின் முக்கியமான திட்டமான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடை (Ration Shop)
உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு சரியான அளவு ரேஷன் கிடைப்பது அவசியமாகும். இதற்காக ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல் (இபிஓஎஸ்) கருவிகளை இணைக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
இந்த விதி அமலுக்கு வந்த பிறகு, ரேஷனை எடை போடுவதில் குளறுபடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் பயனாளிகளுக்கு எந்தச் சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் கிடைக்காமல் இருக்க, ரேஷன் டீலர்களுக்கு ஹைபிரிட் மாடல் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் ஆஃப்லைனிலும் ஆன்லைன் முறையிலும் வேலை செய்யும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களது ரேஷன் பொருட்களை நாட்டிலுள்ள எந்த நியாய விலைக் கடையிலிருந்தும் தனது டிஜிட்டல் ரேஷன் கார்டைப் பயன்படுத்தி எடுக்க முடியும். இந்த வசதி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வந்த பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அதேபோல சொந்த ஊர்களை விட்டுவிட்டு வேறு ஊர்களுக்கு வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காகச் செல்பவர்களுக்கு இது உதவும். அதேபோல, ஒரு ஏரியாவிலிருந்து மற்றொரு ஏரியாவுக்கு இடம் மாறிச் செல்லும் குடும்பங்களுக்கும் இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும். பாயின்ட் ஆஃப் சேல் கருவிகளைப் பொறுத்தவரையில், இந்தக் கருவிகளை வாங்குவதற்கும், இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் வழங்கப்படும் கூடுதல் மார்ஜின், ஏதேனும் ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தால் சேமிக்கப்பட்டால், அதை மின்னணு எடைத் தராசின் கொள்முதல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகிய இரண்டிலும் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் மோசடிகளைத் தவிர்க்கவும் வருமானத்தை உயர்த்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொருட்களின் எடை மற்றும் தரவுகள் விஷயத்தில் மோசடிகள் நடப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த முயற்சியில் அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
இனி இவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
50,000 ரூபாய் இருந்தால் போதும்: ஈசியா இந்த தொழில் செய்யலாம்!