News

Monday, 19 September 2022 05:39 AM , by: R. Balakrishnan

Train Travel

ரயில்களில் மூன்றாம் ஏசி எகானமி வகுப்பு (Third AC Economy Class) பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இனி படுக்கை விரிப்புகள் (Bedrolls) வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதுவரை மூன்றாம் ஏசி எகானமி வகுப்பில் படுக்கை விரிப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது.Class)

மூன்றாம் ஏசி எகானமி வகுப்பு (3rd AC Economy Class)

மூன்றாம் ஏசி எகானமி வகுப்புகளுக்கான டிக்கெட் கட்டணத்தை இந்திய ரயில்வே உயர்த்தியுள்ளது. இதையடுத்து, மூன்றாம் ஏசி எகானமி வகுப்புகளிலும் படுக்கை விரிப்புகளை வழங்குவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் ரயில்களில் மூன்றாம் ஏசி எகானமி வகுப்புகளில் பயணிப்போருக்கு படுக்கை விரிப்புகள் வழங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு, படுக்கை விரிப்புகளை வைப்பதற்கு பெட்டிகளில் போதிய இடம் இல்லாததால் மூன்றாம் ஏசி எகானமி வகுப்புகளில் படுக்கை விரிப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இனி மூன்றாம் ஏசி எகானமி வகுப்புகளில் 81, 82, 83 ஆகிய படுக்கைகளில் படுக்கை விரிப்புகள் வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இனி மூன்றாம் ஏசி எகானமி வகுப்புகளில் பயணிகளால் 81, 82, 83 ஆகிய படுக்கைகளை புக்கிங் செய்ய முடியாது எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சீட்டுகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எமர்ஜென்சி ஒதுக்கீடு கீழ் படுக்கை வழங்கப்படும்.

ஏற்கனவே 2020ஆம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியபோது ரயில்களில் படுக்கை விரிப்புகள் வழங்குவதை இந்திய ரயில்வே நிறுத்தியது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைந்தபின் மீண்டும் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறிங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: என்ன சொன்னார் முதல்வர்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)