மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 August, 2019 3:45 PM IST

தமிழகத்தின் பழநி பஞ்சாமிர்ததிற்கும்,  கேரளாவின் திரூர் வெற்றிலைக்கும் புவிசார் குறியீடு வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தமிழக மற்றும் கேரளா மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிக்கும்படி, உள்ள பொருளுக்கு புவிசார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அந்த பொருள் தனித்தன்மையுடனும்,  மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும்.மேலும்  புவிசார் குறியீடு வழங்கிய பொருளை சம்பந்தப்பட்ட பகுதியைத் தவிர, மற்ற பகுதிகளில்  அதே பெயரில் உற்பத்தி செய்யவோ,  சந்தைப்படுத்த முயல்வது சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படும்.

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு மதிப்பு அதிகரிப்பதோடு, அதன் உற்பத்தி மற்றும் விலையும் நிர்ணயிக்கப்படுவதால், அதுசார்ந்த அல்லது தொடர்புடைய மக்களுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதுடன் , உலக சந்தையில் அதன் மதிப்பும்  உயருகிறது.

முதன்முறையாக கோவில் பிரசாதத்திற்கென்று  புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பழநி பஞ்சாமிர்தத்தின் தனித்துவமான சுவைக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.  அதே போன்று கேரளாவின் திரூர் வகை வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இவ்வகை வெற்றிலை திரூர், தனூர், திருரங்காடி, குட்டிபுரம், மலப்புரம் மற்றும் வெங்காரா பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதிக மருத்துவ குணங்களை உள்ளடக்கியதால் இவ்வகை வெற்றிலைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளன.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Good News, Our Palani Panchamirtham and Tirur betel leaf have been awarded Geographical Indication (GI) tag
Published on: 19 August 2019, 03:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now