2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தானியங்கள் ஏற்றுமதியில் (Export) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.2020-21 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இந்தியாவின் தானியங்கள் (Cereals) (அரிசி, கோதுமை மற்றும் இதர தானியங்கள்) ஏற்றுமதி நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. கொரோனா ஊரடங்கில் அனைத்து தொழில்களும் முடங்கிய நிலையில், விவசாயத் துறை நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. புயல் (Storm) மற்றும் பருவம் தவறிய மழை போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழாமல் இருந்திருந்தால், வேளாண் துறை ஏற்றுமதி இன்னும் அதிகரித்து இருக்கும்.
தானிய ஏற்றுமதி உயர்வு:
முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ 32,591 கோடியுடன் ($ 4581 மில்லியன்) ஒப்பிடும் போது, 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூபாய் மதிப்பில் 52.90 சதவீதமும், அமெரிக்க டாலர் (America Dollar) மதிப்பில் 45.81 சதவீதமும் உயர்ந்து, ரூ 49,832 கோடி என்னும் அளவை இந்தியாவின் தானிய ஏற்றுமதி (India's grain exports) தொட்டது 2020-21-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதியும் குறிப்பிடத் தகுந்த அளவு உயர்ந்திருந்தது. 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரூ 22,856 கோடி ($ 3068 மில்லியன்) ஆக இது இருந்தது. 2019-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ 10,268 கோடியாக ($ 1448 மில்லியன்) ஆக இருந்தது.
கோதுமை ஏற்றுமதி
2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, கோதுமை ஏற்றுமதி (Wheat Export) ரூ 1,870 கோடி ($ 252 மில்லியன்) என்னும் அளவில் இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ 336 கோடியாக ($ 48 மில்லியன்) இருந்தது. டாலர் மதிப்பில் 431.10 சதவீதமும், ரூபாய் மதிப்பில் 456.41 சதவீதமும் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கிலும் தானிய ஏற்றுமதி உயர்ந்திருப்பது, இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
Krishi Jqgran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகளை உற்பத்தி செய்வது எப்படி?
கோடையில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மர இலைகள்