முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினமான இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதல் முறையாக மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். புதுக்கோட்டையில் 1886-ம் ஆண்டு ஜூலை மாதம் 30- ஆம் தேதி நாராயணசாமி-சந்திரம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாக பிறந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1907-ம் ஆண்டு படித்தார். சென்னை அடையாறு புற்றுநோய் மையம் உருவாகுவதற்கு முக்கிய காரணமாவர்.
முத்துலட்சுமி ரெட்டி அவர்களை போற்றும் விதத்தில் தமிழக அரசு ஜூலை 30-ம் தேதியை மருத்துவமனை தினமாக கொண்டாட அறிவித்துள்ளது. அவர் மருத்துவம் மட்டுமல்லாது பல்வேறு சமூகப் பணிகளிலும் அவரை இணைத்துக் கொண்டார். பின்னர் தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினராகவும் பங்கு வகித்தார். அவரை பெருமைப் படுத்தும் வகையில் கூகுள் டூடுள் அவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த தினத்தை கொண்டாடுவதற்கு அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தங்கள் மருத்துவமனைகளின் செயல்பாடுகள், சாதனைகள், மற்றும் சிறப்புகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட படும் என சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவமனையின் சாதனைகள், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சிறப்பு கண்காட்சியும், விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மருத்துவமனை வளாகங்களில் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றியவருப்பவர்கள், சமூக அமைப்பாளர்கள் என அனைத்து தரப்பினரையும் பாராட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran