கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு வரம்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் கூகுள் பே பயன்படுத்தலாம் என்பது கட்டுப்படுத்தப்படலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரும்பாலான மக்கள் கூகுள் பே, ஃபோன் பே போன்ற UPI வழி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக 1 ரூபாய், 10 ரூபாய் என சில்லறை காசை எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறை இருந்து வந்தது. இதனால், பலசரக்கு கடை முதல், டீ கடை வரையில் கூகுள் பே பயன்படுத்துகின்றனர்.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் பணப்பரிவர்த்னைக்கான கால அளவில் 30 சதவீதம் இடைவெளி இருக்க வேண்டும் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வரையறுத்தியது. அந்த வகையில், இந்தாண்டும் கால இடைவெளி நிர்ணயித்து, அதற்கு ஏற்ப பரிவர்த்தனை எண்ணிக்கைகளுக்கு வரம்பிடப்பட உள்ளது.
அதாவது, PhonePe, Google Pay மற்றும் பிற UPI பயன்பாடுகள் மூலம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்பது டிசம்பர வரையில் கிடையாது என்று கூறப்படுகிறது. அவ்வாறு UPI செயலிகளை அடிக்கடி பயன்படுத்தும் போது, ஒரு கட்டத்திற்கு மேல் Transaction Failed என்பது போன்ற பிழைச்செய்திகள் வரலாம்.
மேலும் படிக்க: