கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கூகுள் மேப்பை பயன்படுத்தி காரில் சென்ற போது, நள்ளிரவில் ஓடையில் கார் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைநேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், ஒரு குழந்தை உள்ளிட்ட 4 பேரும், நீண்டப் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.
நள்ளிரவு பயணம்
கேரளா மாநிலம் கும்பநாடு பகுதியைச் சேர்ந்த 4 பேர், எர்ணாகுளத்தில் இருந்து நேற்று இரவு ஊருக்கு காரில் நள்ளிரவில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கூகுள் மேப்பை பயன்படுத்தி டிரைவர் காரை ஓட்டி உள்ளார்.
ஓடைக்குள் கார்
கூகுள் மேப் காட்டிய வழியில் இரவு 11.30 மணியளவில் சென்ற போது திடீரென சாலை முடிந்தது. டிரைவர் சுதாரித்து பிரேக் போடுவதற்குள் கார் நேராக, ஓடையில் இறங்கியது.
அலறல்
இதையடுத்து காரில் இருந்தவர்கள், உயருக்கு போராடும் நிலைமை ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சத்தமாக கூச்சலிட்டனர்.காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் அங்கு கூடினர்.
மீட்பு
பிறகு நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு 4 மாத குழந்தை உட்பட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அதிநவீன வசதிகள் எத்தனைதான் வந்தாலும், அது எல்லாக் காலங்களிலும் நமக்கு கைகொடுக்குமா என்பது சந்தேகம்தான் என்பதற்கு இந்தச் சம்பவமே உதாரணம்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!