News

Saturday, 29 January 2022 10:31 AM , by: Deiva Bindhiya

Google to invest in Airtel: What is the goal of the companies?

ஏர்டெல் – கூகுள் இணைந்து ஏர்டெல்லின் விரிவான சலுகைகளை உருவாக்குவதற்கு இணைந்து செயல்பட உள்ளன. இதன் புதுமையான மலிவுத் திட்டங்களின் நோக்கம், ஆண்ட்ராய்டு சாதனங்களை இயக்கும் நுகர்வோர்களை உள்ளடக்கியதாகும். அமெரிக்க இணைய நிறுவனமான கூகுள், டெல்லியைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் உடன் இணைய இருக்கிறது.

மேலும் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதாக அறிவித்திருக்கிறது. இதில் பார்தி ஏர்டெல்லில் 1.28 சதவீத பங்குகளுக்கு 700 மில்லியன் டாலர் பங்கு முதலீடும், பல ஆண்டு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு 300 மில்லியன் டாலர் வரை முதலீடும் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கூகுளின் முந்தைய முதலீடுகள் என்னன்ன? (What are Google's previous investments in India?)

ஏர்டெல்லின் சமீபத்திய முதலீட்டைத் தவிர, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவிலும் கூகுள் 4.5 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்திருக்கிறது. மேலும், கூகுள் அதன் ஆக்சிலரேட்டர் திட்டத்தின் மூலம் இந்தியாவில் ஒரு டஜன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது.

ஏர்டெல் உடன் கூகுளின் ஒப்பந்தம் என்ன? (What is the Google deal with Airtel?)

கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஃபார் இந்தியா டிஜிட்டலைசேஷன் நிதியின் ஒரு பகுதியாக 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உத்தேசித்திருந்தது. இதில் பங்கு முதலீடு, வர்த்தக ஒப்பந்தங்களுக்கான மொத்த முதலீட்டு நிதியும் அடங்கும் என்பது குறிப்பிடதக்கது. இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளில் பரஸ்பர ஒப்புக்கொள்ளக்கூடிய விதிமுறைகளில் அடையாளம் காணப்பட்டு ஒப்புக்கொள்ளப்படும் என்பது சிறப்பாகும்.

இந்த வணிக ஒப்பந்தங்களில் அடங்கியவை என்னன்ன? (What is Google's deal with Airtel?)

ஒரு செய்திக்குறிப்பின்படி, அதன் முதல் வணிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல், கூகுள் இணைந்து ஏர்டெல்லின் விரிவான சலுகைகளை உருவாக்க இணைந்து செயல்படும் என்பதுதான். இது புதுமையான மலிவுத் திட்டங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களை இயக்கும் நுகர்வோர்களை உள்ளடக்கியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல்வேறு சாதன உற்பத்தியாளர்களுடன் இணைந்து, பலவிதமான விலைப் புள்ளிகளில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதில் உள்ள தடைகளைக் குறைப்பதற்கான கூடுதல் வாய்ப்புகளை ஆராய இந்த நிறுவனங்கள் செயல்படும் என்பது குறிப்பிடதக்கது. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ, குறைந்த விலையில் 4ஜி சாதனத்தை அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

கூகுள், ஏர்டெல்-இன் 5ஜியில் கைகொடுக்குமா? (Will Google lend a hand on Airtel's 5G?)

ஏர்டெல் ஏற்கனவே கூகுளின் 5ஜி-ரெடி எவால்வ்டு பாக்கெட் கோர் & மென்பொருள் வரையறுக்கப்பட்ட நெட்வொர்க் தளங்களைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடதக்கது. எனவே, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த நெட்வொர்க் அனுபவத்தை வழங்க கூகுளின் நெட்வொர்க் மெய்நிகராக்க தீர்வுகளை விரிவாக்கி ஆராய திட்டமிட்டிருக்கிறது.

கூட்டு நிறுவனங்களின் பெரிய உத்தி இலக்குகளின் கீழ், இரண்டு நிறுவனங்களும் 5ஜி, பிற தரநிலைகளுக்கான இந்திய-குறிப்பிட்ட நெட்வொர்க் டொமைன் பயன்பாட்டு முறைகளை அதிநவீன செயலாக்கங்களுடன் இணைந்து உருவாக்க ஏர்டெல், கூகுள் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கவனம் செலுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிகையில், இந்தியாவில் கிளவுட் சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைத்து வளர்த்து வருகிறது என்றும் தெரியப்படித்திருக்கின்றனர்.’

5ஜியின் உபயோகத்தில் நிறைய சந்தேகங்கள் இருப்பதும், சுற்றுசூழலை எவ்வாறு பாதிக்கும், பாதிக்காது என்பது குறித்து பல வாதங்கள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

வைட்டமின் நிறைந்திருக்கும் வண்ண காலிஃபிளவர், அதிக மகசூலும் தரும்!

தோட்டக்கலை மூலம் திராட்சையும் பயிரிடலாம், சான்று இதோ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)