வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை ரத்து செய்யும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாகவும் இந்த நிதியை கொரோனா பேரிடருக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாதம் மாதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு மானியமும் வழங்கி வருகிறது. இவை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
கேஸ் மானியம் ரத்து
இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (Lpg cylinders) மானியத் தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 1-ம்தேதி நிலவரப்படி 14.2 கிலோ எடையுள்ள மானியத்துடன் (subsidy) கூடிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலையும், மானியமில்லா சிலிண்டர் விலையும் ஒன்றாகவே இருந்து உள்ளது. மேலும், கடந்த 4 மாதங்களாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு எந்தவித மானியமும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
மானியத்தை நிறுத்தியதன் மூலம் மத்திய அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் ஏறக்குறையை ரூ.20 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்றும் இதனை கொரோனா நிவாரண திட்டங்களுக்குப் பயன்படுத்த மத்திய அரசு ஒதுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் படுமோசமாக வீழ்ச்சி அடைந்ததுதான் காரணமாகவே மானியம் வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க...
தமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 காலிப் பணியிடங்கள்!
ஆழ்துளை கிணறு அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 50 % மானியம்!!