நாட்டின் அனைத்து விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகள் தங்களைத் கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி) மூலம் இணைத்துக்கொண்டு பயிர்களுக்கான கடன் உதவியை மானிய விலையில் பெற உதவுகிறது, மற்றும் விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்ததாவது, ரூ 1.6 லட்சம் கடன் வரம்புக்கு செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கே.சி.சி சேருவதற்கு விவசாயிகள் ஆரம்ப கட்டணமாக ரூ 2,000 மற்றும் ரூ 5,000 வரை செலுத்த வேண்டும். ஆனால் கே.சி.சி.யில் இணைய விவசாயிகளுக்கு இது பெரும் தடையாக இருந்தது. இதற்காக மாநிலங்கள் மற்றும் மற்ற அமைப்புகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்ட போது அரசாங்கம் இந்த கட்டணங்களை ரூ 1.6 லட்சம் வரை தள்ளுபடி செய்யவும், ரூ 3 லட்சம் வரை சட்டப்பூர்வ கட்டணங்களை மட்டுமே விதிக்கவும் முடிவு செய்துள்ளது என்று வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் தெரிவித்தார்.
நாட்டில் 14 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இருக்கின்றனர், ஆனால் அதில் 7 கோடிக்கும் குறைவானவர்களே கே.சி.சி, யில் இணைந்துள்ளனர். ஆகஸ்ட் 31 க்குள் கே.சி.சி-க்கு கூடுதலாக 1 கோடி விவசாயிகளை சேர்ப்பதற்கான ஒரு தீவிர பிரச்சாரத்தை மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். தீவிர பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ள மாநில அரசு அதிகாரிகளை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அகர்வால் அவர்கள் கோரிக்கை விடுத்தார். மேலும் அதிக அளவிலான விவசாயிகள் கே.சி.சி, வழங்கும் வசதிகளை உபயோகித்து பயனடையக்கூடும்.
மாநிலங்களுக்கான வேளாண் துறை அமைச்சர்கள் மாநாட்டில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி விவசாயிகளுக்கு உதவுவதில் மாநிலங்களுக்கு ஒரு பெரிய பங்கு உண்டு என்றார். விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு "பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி" (PMKisan) மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. "மானியங்கள் தயாராக உள்ளது" இவை விவசாயிகளின் வங்கியில் சென்றடைவதை உறுதி செய்வது மாநில அரசுகளின் பொறுப்பாகும், என்று தோமர் கூறினார்.
மேலும் கூறுகையில் இயற்கை விவசாயத்தில் பல வடமாநிலங்கள் முன் மாதிரியாக விளங்குகின்றது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயற்கை விவசாயம் குறித்து முறையான மாதிரிகள் இல்லாத காரணத்தால் விவசாயிகள், இயற்கை விவசாயத்தை முறையை மேற்கொள்வதில்லை என்று அமைச்சர் கூறினார்.
k.Sakthipriya
krishi Jagran