News

Monday, 20 April 2020 09:50 AM , by: Anitha Jegadeesan

விவசாயிகளின் விளைப்பொருட்கள் வீணாகாமல் வியாபாரிகள் மற்றும் நுகர்வோரை சென்றடையும் வகையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய வேளாண் அமைச்சர் "கிசான் ரத்" (‘Kisan Rath App’) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.

கரோனாவின் தடை உத்தரவினால் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், விற்பனை செய்வதிலும் விவசாயிகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றார். இதற்கு தீர்வு காணும் வகையில் தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre or NIC) உருவாக்கியுள்ள இந்தச் செயலி, விளைபொருட்களை சேகரிப்பு மையத்திற்கும், அங்கிருந்து விற்பனை கூடங்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செயலியின் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை போக்குவரத்து உதவியை எளிதில் பெற இயலும். இதனால் சாகுபடி, அறுவடை மற்றும் சந்தை படுத்துதல் தடையின்றி தொடர்ந்து நடைபெறும். முதல்நிலை போக்குவரத்து என்பது விளையும் இடங்களிலிருந்து அருகில் இருக்கும் மண்டிக்கும் (சந்தை) அல்லது தானிய சேகரிப்பு மையங்களுக்கும் அல்லது உணவுக் கிடங்குகளுக்கும் கொண்டு செல்கிறது.  இரண்டாம் நிலை போக்குவரத்து என்பது அங்கிருந்து வியாபாரிகள் மூலம் நாட்டின் பிற மண்டிகளுக்கு சென்று இறுதியில் நுகர்வோரை சென்றடைகிறது. இதன் மூலம் விவசாயிகளும், வர்த்தகர்களும் பயன்பெற முடிகிறது.

"கிசான் ரத்" சிறப்பம்சங்கள் (Features of Kisan Rath App)

  • வேளாண் பொருட்களான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என அனைத்தையும் இந்த செயலின் மூலம் விற்பனை செய்யலாம்.
  • விரைவில் அழுகக்கூடிய பொருள்களை பதப்படுத்தும் வசதி கொண்ட வாகனங்களை தேர்வு செய்யும் வசதி உள்ளது.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, கூட்டுறவு சங்கங்கள் என அனைவரும் இந்த செயலியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான சரக்கு வண்டிகள், டிராக்டர்கள், வேளாண் இயந்திரங்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
  • சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வாகன உரிமையாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • 5 லட்சத்திற்கும் அதிகமான சரக்கு வண்டிகள், 20,000 அதிகமான டிராக்டர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
  • தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இச்செயலியை பயன்படுத்தலாம்.          

விவசாயிகள் தங்களின் ஆன்ட்ராய்டு கைபேசியிலிருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பின்னர் உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.velocis.app.kishan.vahan&hl=en

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)