TNPSC, வங்கி, காவல்துறை போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்காக, தமிழக அரசு இணைய வழி பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பலரது கனவு (The dream of many)
அரசு வேலை என்பது நாம் வாழும்போது மட்டுமல்ல, மறைவுக்குப் பிறகும், நம்மை நம்பியுள்ளவர்களின் நலனுக்கும் கைகொடுக்கும். அதனால்தான், பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட அரசு வேலையில் சேர வேண்டும் என்பது நம்மில் பலரது கனவாக உள்ளது.
மகத்தான கவுரவம் (Enormous honor)
இதன் காரணமாகவே, குறைந்தபட்சக் கல்வித்தகுதி கொண்ட பணியிடங்களுக்குக்கூட லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். ஏன் அதிகபட்சக் கல்வித்தகுதி கொண்டவர்கள் பலரும் அரசாங்க வேலைக்காக ஆசையுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் அரசு வேலை என்பதற்கு சமூகம் மிகப்பெரிய கவுரவத்தை அளிக்கிறது.
இளையத் தலைமுறை (Younger generation
இதனைக் கருத்தில் கொண்டே, தமிழகத்தில் படித்த இளைஞர்களில், பெரும்பாலானோரின் போட்டி தேர்வுகளுக்கு ஆண்டுக்கணக்கில் தயாராகி வருகின்றனர்.
பயிற்சி வகுப்புகள் (Training classes)
இவர்களுக்கு உதவும் வகையில் தேர்வு குறித்த சரியான பயிற்சிகளை அளிப்பதற்காக, தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட இணைய வழி பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்த வேலைவாய்ப்புத்துறை முன்வந்துள்ளது. இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் 2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தற்போது தொடங்கியுள்ளது.
இலவசப் பயிற்சி (இலவசப் பயிற்சி)
-
இணையவழியில் நடத்தப்பட உள்ள இந்த பயிற்சி முற்றிலும் இலவசம். இந்த பயிற்சி வகுப்புகளில் சேர கட்டணம் ஏதுமில்லை.
-
வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடத்தப்பட உள்ளன.
பங்கேற்பு (Participation)
இந்த பயிற்சி வகுப்புகளில் CISCO WEBEX இணையப் பக்கத்தின் மூலமாகவோ அல்லது CISCO App மூலமாகவோ கலந்துக் கொள்ளலாம்.
மாதிரித் தேர்வுகள் (Sample selections)
இந்த பயிற்சிகளில், பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் மற்றும் அரசு அலுவலர்களைக் கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும்.
லிங்க் (Link)
பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் இந்த https://tamilnaducareerservices.tn.gov.in/vle/vle_home லிங்கைப் பயன்படுத்தி பதிவு செய்துக் கொள்ளவும்.
வினாக்கள் (Questions)
இந்த இணைய தள பக்கத்தில், போட்டித் தேர்வுகளுக்கு உரியப் பாட குறிப்புகள், முந்தைய ஆண்டு வினாக்கள் போன்றவையும் உள்ளன. தேர்வர்கள் இதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பயிற்சியில் பங்கு பெற QR Code மற்றும் மேலும் தகவல்களுக்கு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது QR Code வெளியிடப்பட்டுள்ளது.
போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் அரசின் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தேர்வை எதிர்கொண்டு, வெற்றி பெறலாம்.
மேலும் படிக்க...
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்- கொள்முதல் பணி நிறுத்தம்!
30% கூடுதல் மகசூல் வேண்டுமா? - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!