
கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது,மேலும் அதில் குறிப்பாக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்குவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் பொது மக்களுக்கு உதவியாக பல்வேறு கடன் தொகைகளை அளித்து வருகிறது. இதில் கொரோனா சிகிச்சைகளுக்கு என சிறப்பு கடன் உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ஆசிரியர்களின் முக்கிய செலவான திருமணம், புதிய பைக், கார் போன்றவை வாங்க கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அறிமுகப்படுத்தவுள்ள கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் அரசே கடன் வழங்வதால் மிகவும் குறைவான வட்டியே வசூலிக்கப்படும்.அதேபோல் கார், பைக் ஆகியவை வாங்கும்போது தனியார் ஃபைனான்சியர் மூலம் பணம் பெற்று வாங்குபவர்களுக்கு அதிக வட்டி இருக்கும். இதில் நன்மை தர கூடிய விஷயம் என்னவென்றால் அரசின் கடன் திட்டம் மூலம் வாங்கினால் மிகவும் குறைவாக கிடைக்கும் மேலும் சேமிப்பும் மிச்சமாகும் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க:
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை- 14-ந் தேதி தொடங்குகிறது!
நிதிநெருக்கடி எதிரொலி-தமிழகத்தில் 10,000 பள்ளிகள் மூடப்படுகின்றன!