News

Saturday, 25 December 2021 11:28 AM , by: Elavarse Sivakumar

Credit : One india Tamil

தமிழக அரசின் திட்டத்தின் கீழ், 2 கோடி குடும்பங்களுக்கு, 1,088 கோடி ரூபாய் செலவில், 20 பொருட்கள் அடங்கியப் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு (Pongal gift)

தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில் ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரைக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, ஆண்டுதோறும், அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் செய்யத் தேவையான பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களும், வேஷ்டி சேலையும் பொங்கல் பரிசாக வழங்கப்படுவது வழக்கம்.

ரொக்கம் இல்லை (No cash)

கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பொங்கல் பரிசுடன் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டது.ஆனால் இந்த முறை திமுக ஆட்சியில், 20 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

20 பொருட்கள் (20 items)

இதுதொடர்பான அரசாணை (GO)யில் வெளியிடப்பட்டுள்ளப் பட்டியலில் மொத்தம் 20 பொருட்கள் உள்ளன. அவை அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை ஆகியவை மஞ்சள் பையில் வைத்து வழங்கப்படும்.

மஞ்சள் பை (Yellow bag)

மாநிலத்தில் நுகர்வோர் மத்தியில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ‘மஞ்சள் பை’யில் வைத்து பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம்’ கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) மூலம் 2021 இல் கோயம்பேடு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1,088 கோடி செலவில் 2,15,48,060 குடும்பங்களுக்கு 20 பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனவரி 3ம் தேதி முதல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

ரூ.2.15 கோடி

மேலும், இலங்கைத் தமிழர்கள் மற்றும் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கரும்புகளுடன் 20 பொருட்களும் பரிசாக வழங்கப்படும். இதற்காக மொத்தம் 2.15 கோடி ரூபாய் செலவிடப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நெய் கூட்டுறவு சங்கங்களில் இருந்து அரசால் கொள்முதல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க...

பாம்பைக் கொண்டு ஸ்கிப்பிங்- இணையத்தில் வைரலாகிறது!!

குளிரில் நடுங்கும் குட்டியானைகள்: போர்வை போர்த்தி பராமரிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)