News

Thursday, 11 February 2021 08:53 AM , by: KJ Staff

Credit : Samayam

கொரோனா வைரஸ் ஊரடங்கில் (Corona Lockdown) ஏராளமானோர் வேலையிழந்த நிலையில் உள்ளனர். சிலர் வெளிநாட்டில் இருக்கும் முடியாமல் சொந்த ஊர்த் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கும் விதமாக தொழில் தொடங்க தமிழக அரசு கடனுதவி வழங்கத் திட்டமிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு திரும்பி, புதிதாகத் தொழில் தொடங்க நினைக்கும் தமிழர்களுக்குக் கடனுதவி அளிக்கப்பட உள்ளது.

தொழில் தொடங்க கடனுதவி:

புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ள தொழில்முனைவோர் (entrepreneurs) தங்களது மாவட்டத்திலுள்ள மாவட்டத் தொழில் மையம் (District Business Center) அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகலாம். ’’கோவிட்-19 (Covid-19) தொற்றுநோய்ப் பரவல் காரணமாக 2020 / 2021-ம் ஆண்டுகளில் வெளிநாடு வாழ் தமிழர்கள் பலர் தமிழ்நாடு திரும்பி உள்ளார்கள். 31.01.2021 வரை 3,66,890 வெளிநாடு வாழ் தமிழர்கள் (Tamilargal ​living abroad) வெவ்வேறு நாடுகளில் இருந்து விமானம் / கப்பல் (Ship) மூலமாக தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் பணிபுரிந்த பெரும்பாலானோர் வெவ்வேறு துறைகளில் திறன் பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் பணிபுரிந்து பலதுறைகளிலும் திறன் பெற்றோர், இத்திறனை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் புதிய தொழில் துவங்க ஏதுவாக அரசு புதிய திட்டம் (New Scheme) வகுத்துள்ளது என பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

NEEDS திட்டம்:

தமிழ்நாட்டில் தொழில் துவங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு "புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்" (NEEDS)-என்ற திட்டத்தை மாவட்டத் தொழில் மையம் வாயிலாகத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ள தமிழர்களின் நலனுக்காக "புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்" (NEEDS)-திட்டத்தில் சில சலுகைகள் / தளர்வுகளுடன் New Entrepreneur-cum-Enterprise Development Scheme” – Special Initiative for Migrants (NEEDS-SIM) என்ற திட்டத்தின்கீழ், வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பி, புதிதாகத் தொழில் தொடங்குவோருக்குத் தொழில் தொடங்கக் கடனுதவி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆணைகள், அரசாணை (நிலை) எண்.84, பொது (மறுவாழ்வு) துறை, நாள் 5.2.2021-ல் வெளியிடப்பட்டுள்ளது.

பயனாளர்களுக்கு அழைப்பு

1.1.2020-க்கு பின்னர் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய, புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ள தொழில்முனைவோர், தங்களது மாவட்டத்திலுள்ள மாவட்டத் தொழில் மையம் / மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி, இத்திட்டத்தின்கீழ் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகளை உற்பத்தி செய்வது எப்படி?

கோடையில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மர இலைகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)