தமிழகத்தை பொறுத்த வரை நகர்ப்புறம் ஊர்புறம் என இரண்டு வகை உள்ளது.நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று உச்ச நீதி மன்றம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2019-ல் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற நிலையில் விடுபட்ட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தாமலேயே இருந்தது. மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கோரி திமுக மீண்டும் வழக்கு தொடர்ந்தது.அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர இதர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவிட்டது.
தற்போது காஞ்சிபுரம்,தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நெல்லை,விழுப்புரம் மாவட்டங்களிலும் புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் பணிகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவிகள் அமைக்கப்படுவதாக மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.அதனை தொடர்ந்து தனி அலுவலர் பதவி காலம் மேலும் ஆறு மாதம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவையில் தாக்கல்அமைச்சர்கள் கே.என். நேரு, பெரியகருப்பன் சட்ட மசோதாக்களை பேரவையில் தாக்கல் செய்தனர்.
ஜூன் 30ஆம் தேதியுடன் தனி அலுவலர் பதவி காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. வாக்காளர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா இடையூறு இன்றி பாதுகாப்பை கருத்தில்கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Election 2021: ஏப்ரல் 3ம் தேதி முதல் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துக்குத் தடை!
Election 2021: சூடுபிடிக்கும் தேர்தல் களம் : விவசாயத்தை முன்னிறுத்தும் தேர்தல் பிரச்சாரங்கள்!!