தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அரசு சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் உழவன் செயலி என்பதில் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாவின் முதுகெலும்பாக வேளாண் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக விவசாயத்திற்காக கடந்த 2020ம் ஆண்டு 4 வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால் இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் எழுந்தன. ஏனெனில் விவசாயிகளுக்கு இந்த சட்டங்கள் குறைந்த அளவு லாபத்தை மட்டுமே தருவதாக இருந்தது. அத்துடன் வேளாண் தொழில் தனியார் மயமாக்கப்படுவதாக இருந்தது.
தற்போது இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் தற்போது வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்ததாவது, உள்ளூர் தொழில்நுட்பம், புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு, ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு 2 லட்ச ரூபாய் வரை வழங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் விவசாயிகளுக்கான உழவன் செயலி என்பதில் தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டியது அவசியமானது.
மேலும் படிக்க
ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்த புதிய சேவை 123PAY- யாருக்கு உதவும்