News

Friday, 20 November 2020 03:24 PM , by: Daisy Rose Mary

சொட்டு நீர்ப்பாசன நிதியின் வழிகாட்டுதல் குழு ரூ.3971.31 மதிப்பிலான கடன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 1357.93 கோடி, குஜராத்துக்கு ரூ.764.13 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 

இது குறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது, நபார்டு வங்கியுடன் இணைந்து ரூ.5,000 கோடி மூலதன நிதியில் சொட்டு நீர்ப் பாசன நிதி 2019-20ம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நிதியின் நோக்கம், சொட்டு நீர்ப் பாசன திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு, மாநிலங்களுக்கு வட்டி மானிய கடன்களை வழங்குவதும், பிரதமரின் கிரிஷி சின்சாயி திட்டத்தின் PMKSY கீழான சொட்டு நீர்ப் பாசன திட்டங்களை ஊக்குவிப்பதுமாகும்.

சொட்டு நீர்ப்பாசன நிதியின் வழிகாட்டுதல் குழு ரூ.3971.31 மதிப்பிலான கடன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 1357.93 கோடி, குஜராத்துக்கு ரூ.764.13 கோடி, ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.616.13 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.276.55 கோடி, ஹரியானாவுக்கு ரூ.790.94 கோடி, பஞ்சாப்புக்கு ரூ.150 கோடி, உத்தரகாண்ட்டுக்கு ரூ.15.63 கோடி ஆகியவை இதில் அடங்கும்.

நபார்டு வங்கி ஹரியானா, தமிழ்நாடு மற்றும் குஜராத்துக்கு ரூ.659.70 கோடி வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.1754.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திராவுக்கு ரூ.616.13 கோடி, தமிழகத்துக்கு ரூ.937.47 கோடி, ஹரியானாவுக்கு ரூ.21.57 கோடி, குஜராத்துக்கு ரூ.179.43 கோடி ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க...

தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி....நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட அதிகம்!!

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்!!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)