News

Saturday, 19 February 2022 09:42 AM , by: Elavarse Sivakumar

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை ஒரே செட்டில்மெண்ட்டாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அவரவர் லெவலுக்கு (Level) ஏற்ப சுமார் 1,44,200 ரூபாய் முதல் 2,18,200 ரூபாய் வரை ஒரே செட்டில்மெண்ட்டாகக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொகைக்கு எந்த செலவைச் செய்யலாம் என்பதே இப்போதேத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.

அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே செட்டில்மெண்டாக மொத்தமாக ஊழியர்களுக்கு செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

​அகவிலைப்படி உயர்வு

கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படாமலேயே இருந்தது. பின்னர் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவிதமாக உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மகிழ்ச்சியானதாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் இன்னும் அகவிலைப்படி நிலுவைத் தொகை வந்துசேரவில்லை. நிலுவைத் தொகையை விரைந்து வழங்கும்படி அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

​ஒரே செட்டில்மெண்ட்

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் ஒரே செட்டில்மெண்ட்டாக மொத்தமாக செலுத்திவிடலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அவரவர் லெவலுக்கு (Level) ஏற்ப சுமார் 1,44,200 ரூபாய் முதல் 2,18,200 ரூபாய் வரை ஒரே செட்டில்மெண்ட்டாக அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும். எனவே இந்தத் தொகைக்கு எந்த செலவைச் செய்யலாம் என மத்திய அரசு ஊழியர்கள் இப்போதேத் திட்டமிடலாம்.


​அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

நிதியமைச்சகத்தின் தகவல்படி இந்தியாவில் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சம் பென்சனர்களும் உள்ளனர். அகவிலைப்படி நிலுவைத் தொகை ஒரே செட்டில்மெண்டாக கிடைத்தால் பல லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள்.

மேலும் படிக்க...

மனைவியைக் கொன்றுக் கூறுபோட்டு சமைத்துத் தின்றக் கணவன்!

கன்றுக்குட்டியைக் கற்பளித்த இளைஞர்கள்- உச்சக்கட்ட காமவெறி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)