குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 5ம் தேதி இதற்கான பனிகள் தொடங்கியது.
நெல் கொள்முதல்
2020-21-ஆம் ஆண்டுக்கான கரிஃப் பருவத்திற்கான நெல் கொள்முதல் பணிகள் கடந்த செப்டம்பர் 26 அன்று ஹரியானா மற்றும் பஞ்சாபில் மாநிலங்களில்தொடங்கியது. மேற்கு உத்திரப் பிரதேசத்தில் கடந்த அக்டோபர் 1 அன்று தொடங்கியது. சண்டிகரில் அக்டோபர் 2ம் தேதி அன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் அக்டோபர் 5ம் தேதி அன்று தொடங்கியது. இந்த தகவல்களை இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக செயலாளர் சுதான்சு பாண்டே டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், உத்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் இருக்கும் 1,27,832 விவசாயிகளிடம் இருந்து 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் ரூ 2,882 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில் அக்டோபர் 6 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விலையில் மாற்றம் இல்லை
2020-21-ஆம் ஆண்டுக்கான கரிஃப் பருவம் சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி கரிஃப் பருவத்துக்கான கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது. முந்தைய காலங்களைப் போலவே குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விளைப் பொருட்களை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது. பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்திய உணவு கழகம் மூலமும் மாநில அரசின் முகங்களின் மூலமும் கரிஃப் 2020-21 பருவத்துக்கான நெல் கொள்முதல் வேகம் அடைந்து வருகிறது.
மேலும் படிக்க...
காற்று மாசுபாட்டை தடுக்க டிராக்டர்களுக்கும் நெறிமுறைகள் வகுப்பு!
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்திறங்கிய 45000டன் யூரியா உரம்! விரைவில் விநியோகம் தொடக்கம்!
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!!
குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்கள் - சூப்பரான திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!