News

Saturday, 28 November 2020 05:40 PM , by: Daisy Rose Mary

Credit : Hari Boomi

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா (Pradhan Mantri Kisan Samman Nidhi yojana) திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 7வது தவணையாக 2000 ரூபாயை டிசம்பர் 1 முதல் அவரவரது வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. இதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நீங்கள் கிசான் திட்டத்தில் விண்ணப்பித்திருந்தால் சில வழிமுறைகளை பின்பற்றி உங்கள் நிலை குறித்து அறியலாம்.

பி.எம் கிசான் திட்டம்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாக கொண்டு கடந்த 2019 இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிலம் உள்ள அணைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 என மூன்று தவணைகளில் ரூ.2000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கடந்த 23 மாதங்களில் 6 தவணைகள் மூலமாக சுமார் 11.17 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசு நேரடியாக ரூ.95 கோடிக்கு மேல் பணஉதவி செய்துள்ளது.

விவசாயிகள் பல முறை பிஎம் கிசான் யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்தும் பணம் வரவில்லை என புகார் எழுந்து வருகிறது. இது உங்களுக்கும் நடந்திருந்தால், இப்போது உங்கள் பெயர் அதில் உள்ளதா இல்லையா என்பதை உடனடியாக சரிபார்க்க வேண்டும்.

பி.எம் கிசான் திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பித்திருந்தால் கிழே வழங்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி உங்கள் பெயர் மற்றும் உங்களின் நிலை குறித்து அறிய முடியும்.

PM கிசான் பட்டியலை ஆன்லைனில் பார்க்க...

  • முதலில் pmkisan.gov.in - என்ற பி.எம் கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.

  • பின்னர் முகப்புப்பக்கத்தில் 'Farmers corner' விருப்பத்தைத் தேடுங்கள்

  • அதில் பட்டியலை சரிபார்க்க  ‘‘Beneficiary List’’ என்பதை கிளிக் செய்யுங்கள் 

  • இப்போது மாநில, மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி, கிராமம் ஆகியவற்றை பதிவுசெய்யுங்கள் 

  • இந்த விவரங்கள் அனைத்தையும் உள்ளிட்டு, ‘Get Report’ என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் பட்டியலைப் பெறுவீர்கள்

நீங்கள் Beneficiary list -க்கு நேரடியாக செல்ல

Click here  

இந்த செயல்முறையைச் செய்த பிறகு, உங்கள் பெயர் பிரதமர் கிசான் சம்மன் நிதியில் திட்டத்தில் உள்ளதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் பெயர் பட்டியலில் இருந்தால் உங்களுக்கு 7-வது தவனை ரூ. 2000 உங்கள் வங்கி கணக்கிற்கு நிச்சயம் வரும். 

பி.எம் கிசான் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

  • முதலில் pmkisan.gov.in - என்ற பி.எம் கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.

  • பின்னர் முகப்புப்பக்கத்தில் 'Farmers corner' விருப்பத்தைத் தேடுங்கள்

  • அதில் ‘Beneficiary status’ என்பதை கிளிக் செய்யுங்கள்.

  • பின் ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடுங்கள் 

  • இந்த விவரங்கள் அனைத்தையும் உள்ளிட்டு, ‘Get Status’ என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் பட்டியலைப் பெறுவீர்கள்

நீங்கள் Beneficiary status -க்கு நேரடியாக செல்ல

Click here 

சுய பதிவு / சி.எஸ்.சி விவசாயியின் நிலையை சரிபார்க்க

Click here 

PM KISAN பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை PM Kisan Mobile app மூலம் சரிபார்க்கலாம். PM Kisan Mobile app-யை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் 

PM kISAN Mobile app


எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)