இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 October, 2022 7:56 AM IST
GPF Interest for Govt employees

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜெனரல் வருங்கால வைப்பு நிதிக்கு (General Provident Fund) அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

GPF வட்டி விகிதம்

அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அமலில் உள்ள 7.1% வட்டி விகிதம் தொடர்ந்து வழங்கப்படும்.

இதுகுறித்து நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள தீர்மானத்தில், ஜெனரல் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு 2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 7.1% வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் வருங்கால வைப்பு நிதி மட்டுமல்லாமல் கீழ்காணும் திட்டங்களுக்கும் 7.1% வட்டி விகிதம் பொருந்தும்.

  • பங்களிப்பு வைப்பு நிதி (Contributory Provident Fund)
  • அனைந்திந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி (All India Services Provident Fund)
  • ரயில்வே வைப்பு நிதி (State Railway Provident Fund)
  • ஜெனரல் வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்) - [General Provident Fund (Defence Services)]
  • இந்திய ஆர்டினன்ஸ் துறை வருங்கால வைப்பு நிதி (Indian Ordinance Department Providence Fund)
  • இந்திய ஆர்டினன்ஸ் ஆலை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (Indian Ordinance Factories Workmen's Provident Fund)
  • இந்திய கடற்படை கப்பல் துறை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (Indian Naval Dockyard Workmen's Provident Fund)
  • பாதுகாப்பு சேவை அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி (Defence Services Officers Provident Fund)
  • ராணுவ படை அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி (Armed Forces Personnel Provident Fund)

மேலும் படிக்க

விவசாயிகள் வங்கி கணக்கில் மானியக் கடன்: விரைவாக விண்ணப்பிக்கவும்!

FD வட்டி உயர்வு: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!

English Summary: GPF Interest for Govt Employees: Central Govt Announcement!
Published on: 07 October 2022, 07:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now