நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 April, 2023 4:38 PM IST
Gram sabha meeting all over tamilnadu on 1st may

தொழிலாளர் தினமான வருகிற மே-1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் கிராம சபை கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் தவறாது கலந்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொழிலாளர் தினமான 1 ஆம் தேதி, கிராமசபைக் கூட்டம் நடைப்பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு நடைப்பெற உள்ள கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய கருப்பொருட்களின் விவரம் முறையே.

  1. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2022 முதல்03.2023 வரை)
  2. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.
  3. சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தில்.
  4. கிராம வளர்ச்சித் திட்டம்(VPDP).
  5. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரம் குறித்து விவாதித்தல்.
  6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2022-2023 மற்றும் 2023-24 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரம் மற்றும் தொழிலாளர் மதிப்பீடு (Labour Budget) குறித்து விவாதித்தல்.
  7. பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் - குறித்து விவாதித்தல்.
  8. அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து விவாதித்தல்.
  9. பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்து விவாதித்தல்.
  10. தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல்.
  • கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல்.
  • எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் உறுதிமொழி எடுத்தல்.
  • ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.
  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல். வறுமை குறைப்பு திட்டம்(VPRP)
  • அந்தந்த கிராமத்தில் நிலவும் இதர பிரச்சினைகள், தேவைகள் குறித்து விவாதித்தல்.

மேலும் கிராம ஊராட்சிகளில், தங்களது ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கு ( படிவம்-30ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே-1 ஆம் தேதி நடைப்பெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

pic courtesy- krishijagran edit/youtube Thumbanail

மேலும் காண்க:

துப்பாக்கி உடன் பள்ளி மாணவர்களை சிறைப்பிடித்த ஆசாமி- சினிமாவை மிஞ்சிய காட்சிகள்!

English Summary: Gram sabha meeting all over tamilnadu on 1st may
Published on: 27 April 2023, 04:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now