News

Wednesday, 27 November 2024 02:04 PM , by: Muthukrishnan Murugan

TNAU Coimbatore

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் வேளாண் தொழில் முனைவோர் மற்றும் வேளாண் துறை சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டமான (RKVY-RAFTAAR-R-ABI) கீழ் பயனாளர்களுக்கு மானியம் வழங்கும் விழா நடைப்பெற்றது.

மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் Rashtriya Krishi Vikas Yojana - Remunerative Approaches for Agriculture and Allied sectors Rejuvenation - Regional Agribusiness Incubators (RKVY-RAFTAAR-R-ABI) எனும் திட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக இயக்குனரகம், தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் 2019-ல் இருந்து செயல்பட்டு வருகின்றது.

மானியத்திட்ட விவரங்கள்:

இத்திட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகள் மூலம் மானியம் வழங்கப்படுகின்றது.

(i) புதிய வேளாண் தொழில் முனைவோர்களுக்கான (AOP) ரூ. 5 இலட்சம் வரையிலான மானியத் தொகை

(ii) வேளாண் துளிர் நிறுவனங்களுக்கான (SAIP) ரூ.25 இலட்சம் வரையிலான மானியத் தொகை

மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் MoA & FW- RKVY திட்டத்தின் கீழ் 2019 முதல் 2022 வரை ரூபாய் 8.10 கோடி மானியம் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் 72 தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

19 பயனாளர்கள்: ரூ.1.05 கோடி மானியம்

அந்த வகையில், இதுவரை மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் (RKVY- RAFTAAR-R-ABI) கீழ் தேர்ந்தெடுக்கபட்ட புத்தொழில் முனைவோர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு கடந்த நவ.25 ஆம் தேதியன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர்.V.கீதாலட்சுமி மானியங்களை வழங்கினார். வேளாண் துளிர் நிறுவனங்களுக்கான SAIP Cohort - II மற்றும் III ன் 19 மானியதாரர்களுக்கு ரூபாய்.1.05 கோடி வழங்கினார்.

அதன்பின்னர் துணைவேந்தர் கீதாலட்சுமி தனது உரையில், இளம் பட்டதாரிகளை வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் நிலையான மற்றும் இலாபகரமான விவசாய வணிகத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்தவும் செயல்படுத்தவும், விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்களை வழிகாட்டும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநர் முனைவர் S.சோமசுந்தரம், வரவேற்புரையாற்றினார் மற்றும் தொழில் நுட்ப வணிக காப்பக செயல் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி A.V.ஞானசம்பந்தம் நன்றியுரை வழங்கினார். மேலும் இவ்விழாவில் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற தொழில் முனைவோர்கள் தங்கள் மானியத்தை வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தி கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

வயது வாரியாக தென்னை மரங்களுக்கு காப்பீடு- ஆட்சியர் கொடுத்த அப்டேட் !

பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)