1, விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டத்தின் கீழ் கிரைன்ஸ் என்ற இணையதளம்
விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டத்தின் கீழ் கிரைன்ஸ் என்ற இணையதளம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் அவர்கள் தகவல்!!!
கிரைன்ஸ் இணையதளத்தில் வருவாய்த்துறை, வேளாண்மை- உழவர்நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பேரிடர்மேலாண்மை, கூட்டுறவுத் துறை, பட்டு வளர்ச்சிதுறை, வேளாண் பொறியியல் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் விற்பனை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, விதைச் சான்றளிப்பு மற்றும் சர்க்கரைத் துறைகள் இணைக்கப்பட உள்ளது.
விவசாயிகளின் விபரங்களை ஒற்றை சாலர முறையில் பதிவு செய்வதால், வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்காமல் எளிதில் விவசாயிகள் விண்ணப்பிக்கும் வகையில் கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள்
1. ஆதார் அடையாள அட்டை
2. அலைபேசி எண்
3. புகைப்படம்
4. வங்கி கணக்கு விபரம்
5. நில விபரங்கள்
இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆவணங்களுடன் தங்களது கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர் / உதவி வேளாண்மை அலுவலர்/ உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெற விவசாயிகளுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2.வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் மூலம் விவசாய பொருட்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் மூலம் பொருட்கள் வழங்குகிறது
விவசாய பெருமக்களுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் (முடுக்கன்துறை, உத்தண்டியூர், தொப்பம்பாளையம் )பஞ்சாயத்து விவசாயம் மக்களுக்கு பவானிசாகர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் கீழ்கண்ட இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
கடப்பாரை-1 .மண்வெட்டி-1. களக்கொத்து -1. கதிர்அரிவாள்-2 . இரும்பு சட்டி-1. விவசாயிகள் இடுபொருளுக்கு கட்டும் தொகை ரூ. 1535/- தார்பாய் + உயிர் உரம்-அளவு-18×15 அடி. விவசாயிகள் இடுபொருளுக்கு கட்டும் தொகை-1107+150=ரூ. 1257/-பேட்டரி தெளிப்பான்+உயிர் உரம் இடுபொருளுக்கு விவசாயிகள் கட்ட வேண்டிய தொகை-2480+150=ரூ.2630/- ஜிங் சல்பேட் 10-கிலோ=ரூ.410/-
மேலும் விவரங்களுக்கு திரையில் காணும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் - நிஷா- உதவி வேளாண்மை அலுவலர்(உத்தண்டியூர் )-8072012196 .வள்ளி -உதவி வேளாண்மை அலுவலர்( முடுக்கன்துறை, தொப்பம்பாளையம்)-6380403553
தேவைப்படும்ஆவணங்கள்: ஆதார் நகல், சிட்டா- ஆர் எஸ் ஆர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-1அனைத்து இடு பொருட்களும் விவசாய மக்களுக்கு 23/03/2023 முதல் -27/03/2023 வரை ஐந்து நாட்களுக்குள் முன்னுரிமையின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது அனைத்து விவசாய மக்களும் தவறாது பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
3.சென்னையில் இன்று ஜி-20 பணிக்குழு கூட்டம் தொடக்கம்
சென்னையில் இன்று (24.03.2023) தொடங்கும் ஜி-20 பணிக்குழு கூட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது
இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் இரண்டாவது நிதி தொடர்பான கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் சென்னையில் நாளை (24.03.2023) மற்றும் நாளை மறுநாள் (25.03.2023) நடைபெறுகிறது.
இதற்கு மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் இங்கிலாந்து நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகிய இருவரும் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் 20 உறுப்புநாடுகள், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள், பல்வேறு சர்வதேச மற்றும் மண்டல அமைப்புகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
4,ஒரு பிளாஸ்டிக் பாட்டீலுக்கு ஒரு ருபாய் நெல்லையில் புதுவித விழிப்புணர்வு
பிளாஸ்டிக் பாட்டில்களால் உண்டாகும் சுகாதாரக் கேட்டினை தவிர்க்கும் நோக்கில், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டுக்குப் பின் அலட்சியமாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கி அடைப்புகளை ஏற்படுத்துவதுடன், மண்ணில் புதையும் பட்சத்தில் பல்வேறு சூழலியல் கேடுகளையும் ஏற்படுத்தும்.
அதனைத் தவிர்க்கும் பொருட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனை..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் அதிகபட்ச விலையாக ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்து 360 தான். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதிதான் தங்கம் விலை சாதனை படைத்து இருந்தது. இந்த சாதனையை கடந்த 18ம் தேதி தங்கம் விலை முறியடித்து புதிய உச்சத்தை தொட்டு புதிய சாதனை படைத்தது. 20ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,580க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,640க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மேலும் புதிய வரலாற்று சாதனையை படைத்தது.
6, வானிலை தகவல்
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
24.03.2023 முதல் 26.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை
7, பத்தாண்டுகளில் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய இமாலய நதிகளின் நீரோட்டம் குறையும்-ஐநா பொதுச்செயலாளர் தகவல்
உலக வெப்பமயமாதல் காரணமாக வரும் பத்தாண்டுகளில் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய இமாலய நதிகளின் நீரோட்டம் குறையும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளார்.
ஐநாவில் நடைபெற்ற சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் பேசிய குட்ரெஸ், 1900ம் ஆண்டு முதல் உலக சராசரி கடல் மட்டம் முந்தைய 3 ஆயிரம் ஆண்டுகளில் உயர்ந்ததை விட வேகமாக உயர்ந்து வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது என்று தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க புவி வெப்பமடைதலை 1 புள்ளி 5 டிகிரிக்கு குறைக்க வேண்டுமென கூறிய குட்ரெஸ், நாம், நீர் சுழற்சியை உடைத்ததோடு, சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்து, நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி விட்டதால், மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பென்சன் விதியில் அரசு செய்த முக்கிய மாற்றம்!
என்னது கருப்பு உருளைக்கிழங்கா! கிலோ 500 ரூபாயா! சாதித்த விவசாயி!