News

Tuesday, 14 December 2021 09:05 PM , by: R. Balakrishnan

WHO Warns

ஒமிக்ரான் தாக்கத்தால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடுமென உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது தீவிரமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.

பெரும் பாதிப்பு (Heavy Impact)

தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து தற்போது ஹாங்காங்கில் ஓமிக்ரான் தாக்கத்தால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும். ஓமிக்ரான் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு (Immunity) எதிராக தீவிரமாக தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
ஆனால் தென்னாப்ரிக்க சுகாதாரத்துறை இதுகுறித்துக் கூறுகையில் டெல்டா வைரஸை காட்டிலும் ஓமிக்ரான் மிகக் குறைவான தாக்கம் கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் குறித்து தொடர்ந்து பல்வேறு மருத்துவ அமைப்புகள் இன்னும் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து தெளிவான முடிவுக்கு இன்னும் எந்த அமைப்பும் வரவில்லை. அதேசமயத்தில் அஜாக்கிரதையாக இருந்தால் ஓமிக்ரான் மேலும் பல உயிர்களை பலி கொள்ளும் என தற்போது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வறிக்கை

வரும் வாரங்களில் ஓமைக்ரான் குறித்து பல தகவல்களை உலக சுகாதார அமைப்பு அடுத்தடுத்து வெளியிடும் என அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 29-ஆம் தேதி ஒமிக்ரான் குறித்த முதல் ஆய்வறிக்கை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது. ஓமைக்ரான் பல்வேறு விதங்களில் உலக குடிமக்களின் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என அப்போது கூறப்பட்டிருந்தது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இரண்டாவது அறிக்கையில் இதே கருத்தை உலக சுகாதார அமைப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஒமிக்ரான் பாதிப்பால் இங்கிலாந்தில் முதல் உயிரிழப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)