பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 10 October, 2022 5:28 PM IST
'Green TN Mission': Saplings can also be obtained through the website

தமிழ்நாடு அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 265 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மரம் மற்றும் காடுகளின் பரப்பளவை 23.69 சதவீதத்தில் இருந்து 33% சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் கீழ், 

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக ‘பசுமை தமிழ்நாடு’ (Green TN Mission) என்னும் திட்டத்தை தொடங்கி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது பாராட்டுகளை தெரிவிக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில், “#காவேரிகூக்குரல் இயக்கம், #பசுமைதமிழ்நாடு திட்டத்திற்கு தனது மனமார்ந்த ஆதரவை தெரிவித்து கொள்கிறது என தெரிவித்திருந்தார். இத்திட்டம் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு, மாநில செழிப்பிற்கு, நல்வாழ்வை அதிகரிக்க என பல நல்ல விசயங்களுக்கு, இது மிகவும் அவசியமாகும். இந்நேரத்தில் இதை செயலுக்கு கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்கள்” என பதிவில் தெரிவித்திருந்தார்.

அதே நேரம் தற்போது, இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 265 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக மாநிலத்தின் மரம் மற்றும் காடுகளின் பரப்பளவை 23.69 சதவீதத்தில் இருந்து 33% சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 73 லட்சம் நாற்றுகள் வளர்க்கப்பட்டு வேளாண்மைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் 43 வனப் பிரிவில் 260 நாற்றங்கால் உள்ளது. மரங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முழுப் பொறுப்பும் மாநில பசுமைக் குழு மற்றும் மாவட்ட பசுமைக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ் மரக்கன்றுகளை இணையதளம் மூலமும் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், தனிநபர்களுக்கு மரக்கன்று தேவைப்பட்டால் www.greentnmission.com இணையதளத்தை அணுகலாம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம் அறிவிப்பு.

மேலும் படிக்க:

BECIL ஆட்சேர்ப்பு 2022 – 94 காலிப் பணியிடங்கள், ரூ.44,000 சம்பளம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வாழை விலைக்கான முன்னறிவிப்பு!

English Summary: 'Green TN Mission': Saplings can also be obtained through the website
Published on: 15 December 2021, 09:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now