மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 May, 2022 7:38 PM IST
TNPSC Group-2

TNPSC குரூப் 2 தேர்வு இன்று நடைபெறுகிறது. இத்தேர்வில் தேர்வர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். தேர்வுக்காக தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் இருந்து 5,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுக்கு அனுப்பப்படுவர்.

குரூப் 2 தேர்வு (Group 2 Exam)

மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.

தேர்வர்களுக்கு கட்டுப்பாடுகள் (Restrictions for Examiners)

  • தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும்.
  • முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி அளிக்கப்படுகிறது.
  • தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • அதிகாரிகள் சரி பார்க்கும்போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி, முகத்தைக் காட்ட வேண்டும்.
  • செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை.
  • கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
  • சமூக இடைவெளி, சுய பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
  • தெளிவாகத் தெரியும் பாட்டிலில் சொந்தமாக சானிட்டைசரைத் தேர்வர்கள் எடுத்துக்கொண்டு வர வேண்டும்.
  • தேர்வுக்குப் பயன்படுத்தும் சொந்த எழுது பொருட்களை, மற்ற தேர்வர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
  • முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வு முறை (Exam Method)

  • அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும்.
  • டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
  • ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும்.

மேலும் படிக்க

குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: TNPSC அறிவிப்பு

சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன

English Summary: Group 2 Exam today across Tamil Nadu: Attention Examiners!
Published on: 21 May 2022, 07:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now