மே 21ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48 பேரும் அடங்கும். தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 (TNPSC Group-2)
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,642 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
காலை 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வை கண்காணிக்க 333 பறக்கும் படைகள், 6,400 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு மொத்தமாக 11,78,175 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலை நகரங்கள் மற்றும் குறிப்பிட்ட தாலுக்காக்களை உள்ளடக்கிய 117 தேர்வு மையங்களில் 4,012 தேர்வுக்கூடங்களில் தேர்வு நடைபெறும்” என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
தீவிரமாகும் வெப்ப அலை: எச்சரிக்கை விடுத்தது சுற்றுச்சூழல் அமைப்பு