News

Friday, 10 March 2023 07:32 AM , by: R. Balakrishnan

TNPSC group 4

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிந்து 7 மாதங்களாகியும் இன்னும் அதன் முடிவுகள் வெளியாகவில்லை.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4)

முந்தைய ஆண்டுகளைவிட அதிக அளவிலான தேர்வர்கள் பங்கேற்பு உட்பட பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவு வெளியீட்டில் தொடர் தாமதம் நிலவி வருகிறது. குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக வெளியிடக் கோரி சமூக வலைதளங்கள் வாயிலாக தேர்வர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஜூலை 24-ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கையும் 9,870 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் படிக்க

ரெப்போ வட்டி உயர வாய்ப்பு: வங்கி கடன் வாங்கியோருக்கு EMI உயரும் அபாயம்!

ரேஷன் கடைகளில் இலவச கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழக அரசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)