இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 August, 2022 7:06 PM IST
GST for Rice Bag

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் 2017 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டியின் கீழ் அனைத்து பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஒரே மாதிரியான வரி நான்கு அடுக்குகளின் கீழ் பிரிக்கப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி அமலான பிறகு நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. நிறைய பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டது. நிறைய பொருட்களின் வரி உயர்த்தப்பட்டும் குறைக்கப்பட்டும் இருக்கிறது.

அரிசிக்கு ஜிஎஸ்டி (GST for Rice)

பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு சமீபத்தில் ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப்பட்டது. 25 கிலோ வரை எடை கொண்ட பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள் செய்யப்பட்ட பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் வணிகர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய இக்கட்டான சூழல் உருவானது. குறிப்பாக அரிசி போன்ற பொருட்களின் விலை உயர்த்தப்படுமா என்று பொதுமக்கள் அஞ்சினர்.

அரிசி ஆலைகளிடமிருந்தும் வணிகர்களிடமிருந்தும் மொத்த விலையில் வாங்கும் சில்லறை விற்பனையாளர்கள் இப்போது 30 கிலோ எடை கொண்ட அரிசி பைகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் 30 கிலோ அரிசி பைக்கு ஜிஎஸ்டி கிடையாது. இதன் மூலம் ஜிஎஸ்டி வரி விதிப்பு சுமையிலிருந்து தப்பித்துச் செல்கின்றனர். ஏனெனில், இதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த விரும்பவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் பிராண்டடு அரிசி மூட்டைகளுக்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது அனைத்து வகை அரிசிகளுக்கும் இது பொருந்தும். எனவே மொத்த விலையில் 30 கிலோ அரிசி மூட்டைகளை வாங்கி அவற்றை பிரித்து வைத்து சில்லறை விலையில் விற்பனை செய்கின்றனர். அரிசின் இந்த வரி விதிப்பு முறை கடும் நெருக்கடியைக் கொடுப்பதாக அரிசி ஆலை கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

அதிரடியாக குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை!

PF கணக்கில் 40,000 ரூபாய் டெபாசிட்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

English Summary: GST for rice bag: Sellers with innovative solution!
Published on: 02 August 2022, 07:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now