வங்கிக் திவாலாகும்போது, வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் வகையில், புதிய ஒரு முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாக, நிம்மதியைத் தரும் என நம்பப்படுகிறது.
வங்கிகள் (Banks)
மக்கள் தங்கள் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவுவது வங்கிகள். வங்கியில் பணம் முதலீடு, வைப்பு நிதி, வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் நடைமுறையில் உள்ளன.
பணம் கிடைக்காது (No money available)
ஆனால், ஒரு வங்கி அளவுக்கு அதிகமாகக் கடன் கொடுத்து, அதை வசூலிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும்போது, திவாலாகும்.அவ்வாறு நீங்கள் பணம் முதலீடு செய்திருந்த வங்கி திவாலானால், உங்கள் பணமும் அம்போதான்.
திவால் அச்சம் (Fear of bankruptcy)
இதனால், நாம் பணம் சேமித்துவைக்கும் வங்கி திவாலாகுமா என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதுமட்டுமல்லாமல், திவாலாகிவிடுமோ என்றக் கவலையும் ஏற்படுகிறது.
மத்திய அரசு முடிவு (Federal Government decision)
பணத்தை முதலீடு செய்துவிட்டு, எப்போதும் கவலையோடு இருக்க வேண்டிய இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வங்கி வாடிக்கையாளர்களைக் காக்க புதிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
அதாவது திவாலான வங்கியில் உங்கள் பணம் இருந்தால், அதை வங்கி வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்குள் பெறுவார்கள்.
டி.ஐ.சி.ஜி.சி சட்டம் (TICGC Act)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி, ஒரு வங்கி திவால் என அறிவிக்கப்பட்டால், வாடிக்கையாளர் டி.ஐ.சி.ஜி.சி சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்குள் ரூ .5 லட்சம் வரை திரும்பப் பெற முடியும்.
திருத்தம் (Correction)
இதற்காக, வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் சட்டத்தில் (DICGC Act) மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு, வைப்புத்தொகை மீதான காப்பீட்டுத் தொகையை ரூ .5 லட்சமாக மத்திய அரசாங்கம் உயர்த்தியது.
நிதியமைச்சர் தகவல் (Information of the Minister of Finance)
மத்திய அமைச்சரவை முடிவு குறித்து தகவல் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டி.ஐ.சி.ஜி.சி மசோதா 2021 இன் கீழ் 98.3 சதவீத வைப்புத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.
டி.ஐ.சி.ஜி.சி சட்டத்தின் கீழ், அனைத்து வணிக, வெளிநாட்டு, சிறு, கிராமப்புற, கார்ப்பரேட் வங்கிகள் அனைத்துமே, வங்கிகள் வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்ட திருத்த மசோதாவுக்கு (2021) கீழ் வரும் எனத் தெரிவித்தார்.
சிரமங்கள் (Difficulties)
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் டி.ஐ.சி.ஜி.சி திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் கூறினார்.
பி.எம்.சி வங்கி, யெஸ் வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியால் திவாலான வங்கி" என அறிவிக்கப்பட்ட பிறகு, வைப்புத்தொகையாளர்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெறுவதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
India Post Recruitment 2021: தபால் துறையில் வேலை!தேர்வு இல்லாமல் ஆட்சேர்பு!
இறந்தவர்களின் ஆதார்-பான், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை என்ன செய்வது?
உங்களிடம் கிழிந்த நோட்டுகள் உள்ளதா? கவலை வேண்டாம், நீங்கள் எளிதாக எக்சென்ஜ் செய்யலாம்.