தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு, உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் வாழ்வதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி (CM Edappadi K Palanichamy) தெரிவித்தார்.
தேசிய விவசாய தினம்:
மழை வெயில் பாராது உழைக்கும் வர்க்கம் என்றால் அவர்கள் தான் விவசாயிகள் (Farmers). உணவளிக்கும் கடவுளாக வாழ்பவர் விவசாயி. விவசாயிகளுக்குத் துணையாக இருப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
விவசாயத்திற்காக சட்டதிட்டங்களை கொண்டுவந்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவாக 2001 முதல் டிச. 23ல் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
விவசாயிகளை அரவணைப்போம்:
உலகின் தலையாயத் தொழிலான உழவுத் தொழில் (Agriculture) செய்து வரும் அனைத்து விவசாயப் பெருமக்களுக்கும், எனது நெஞ்சம் நிறைந்த "தேசிய விவசாய தின (National Farmers Day) நல்வாழ்த்துகளை" அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
உலகின் அனைத்து மனித உயிர்களுக்கும் உணவளிக்கும் கடவுள்களின் தினமான தேசிய விவசாயிகள் தினத்தில், தேசத்தின் வளத்திற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரமான நம் விவசாயப் பெருமக்களை, இன்று போல் என்றும் அரவணைப்போம் என் தாய்த் தமிழ் உறவுகள் உறுதியேற்போம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
டெல்லியில் விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!
நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது! முதல்வர் அறிவிப்பு!