தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு காலம் குறைவாக உள்ள நிலையில் பாடசுமையை குறைக்க பாடத்திட்டத்தை 50% வரை குறைக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டம் குறைப்பு:
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டது. ஏற்கனவே கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது தற்போது 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதியும், 10ம் வகுப்புக்கு மே 10ம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தபடுத்தும் வகையில் இம்மாத இறுதியில் 2ம் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பொதுத்தேர்வும் வர உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கு குறைவான காலமே உள்ளதால் மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதில் அச்சம் அடைந்துள்ளனர்.
அதனால் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க பாடத்திட்டத்தை 35% முதல் 50% சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் மாதத்திற்குள் பாடங்களை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும். அதன் பிறகு திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெறும். மாணவர்கள் பயப்படாமல் தேர்வினை எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க