முன்பதிவு இல்லாத பயணியர் பயன் பெறும் வகையில், 24 விரைவு ரயில்களின் சேவையில், தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. இதனால், முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
தெற்கு ரயில்வே (Southern Railway)
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயின் பல்வேறு வழித்தடங்களில், முன்பதிவு இல்லாத பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, இந்த பயணியர் பயன் பெறும் வகையில், தேர்வு செய்யப்பட்ட 24 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ரயில்களின் தடத்தில், ஒரு பகுதியில் மட்டும் சில பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் மங்களூர், எழும்பூர் - கேரளா மாநிலம் கொல்லம், எழும்பூர் - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - எழும்பூர், துாத்துக்குடி - கர்காடகா மாநிலம் மைசூர், சென்ட்ரல் - நாகர்கோவில் உள்ளிட்ட விரைவு ரயில்களில், ஓரிரு பெட்டிகள் மட்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது
வரும் அக்டோபர் 15 முதல் படிப்படியாக அமலாகும் என அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க