ரிலையன்ஸ் ஜியோ ரூ. 419 விலையுள்ள புதிய திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோ பயனர்களுக்கு தேவைப்படும் இந்த முக்கிய தொகுப்பை பற்றி விரிவாக காண்போம்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது திட்டத்தின் விலையை சென்ற வருடம் இறுதியில் உயர்த்தியது. அதனையடுத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் அதிகரித்து விட்டது. இதன் மூலம் பல ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்ந்து விட்டது. அதனால் ஜியோ பயனாளர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு திட்டத்தில் 100 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது 601 ரூபாய்க்கு இருந்த இந்த திட்டம் 100 ரூபாய் குறைந்து மீண்டும் 499 ரூபாய்க்கு கிடைக்கும். அதனுடன், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது புதிதாக ரூ 419 தொகையில் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த திட்டத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தினந்தோறும் 3 ஜிபி இணையத்தைப் பெறலாம். அதாவது மொத்தமாக 28 நாட்களுக்கு 84 ஜிபி டேட்டாவை பெறலாம். இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்கிலும் இலவசமாக பேசி கொள்ளலாம் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள், OTT நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவும் கிடைக்கும். மேலும், இந்த திட்டம் ஜியோ கிளவுட், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் சந்தாவை வழங்கி வருகிறது.
மேலும் படிக்க
ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ ஓடும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்