அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதிக்க விடக்கூடாது என அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதீத கனமழை (Heavy rain)
வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சராசரி மழை அளவைவிட அதீத கனமழை மற்றும் மிக கனமழை பெய்துள்ளது.
ஆய்வுக் கூட்டம் (Review meeting)
இந்நிலையில், தமிழ்நாட்டில் பரவலாகப் பெய்துவரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-தமிழ்நாட்டில் பரவலாகப் பெய்து வரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
அறிவுரை (Advice)
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மழை சேதங்கள் குறித்துக் கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்துவரும் மழை காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து, அம்முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரவும், அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுரை வழங்கினார்.
நெல் பாதிக்கக்கூடாது (Paddy should not be affected)
மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யவும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி வழங்கவும் அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க...
80 - 85 % வரை மானியம் கிடைக்கும் தொழில்- ரூ.5 லட்சம் வரை வருமானம்!
வேலையற்ற இளைஞர்கள் பால் பண்ணைகள் திறக்க மானியம் வழங்கும் அரசு!