News

Friday, 05 February 2021 08:12 AM , by: Elavarse Sivakumar

Credit : Twitter

பெண்கல்வியை ஊக்குவிக்க பல்வேறு மாநில அரசுகள் பலவிதமான சலுகைகளை வழங்கிவரும் நிலையில், பட்டப்படிப்பு முடிச்சா ரூ.50,000மும், பிளஸ் டூ முடிச்சா ரூ.25,000மும் வழங்க வகை செய்யும் முடிவுக்கு இந்த மாநில அமைச்சரவை ஒப்புதல்  வழங்கியுள்ளது. 

அதாவது பெண்களின் கல்வி உதவித்தொகையை அதிரடியாக உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்தரவு நடப்பு நிதியாண்டு முதல் அமலாகிறது. இத்தகைய அறிவிபை வெளியிட்டுள்ள மாநிலம் எது என்றால் பீகார்.

உதவித்தொகைத் திட்டம் (Scholarship Scheme)

பீகார் மாநிலத்தில் திருமணமாகாத பெண்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு முக்கியமந்திரி கன்யா உத்தன் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது.

உதவித்தொகை அதிகரிப்பு (Scholarship increase)

இதன்மூலம் இளம் வயதில்பெண் குழந்தைகள் திருமணம் செய்துகொடுப்பதைத் தவிர்க்கவும், பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டில் இருந்து திருமணமாகாத பெண்களுக்கான கல்வி உதவித்தொகையை அதிகரித்து முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரூ.50,000 

இந்த புதிய அறிவிப்பின்படி, பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இதுதொடர்பான கல்வித்துறையின் மசோதாவிற்கு பீகார் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தால் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 1.6 கோடி பெண்கள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கியமந்திரி வித்யார்த்தி பிரோத்சாகன் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் 33,666 சிறுபான்மையின சமூக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 34 கோடி ரூபாய் பிகார் மாநில அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்தகைய அறிவிப்பை தமிழக அரசும் வெளியிட வேண்டும் என  பெண்கள்  எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க...

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு - திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தண்ணீருக்கு அடியில் திருமணம் - புதுமை செய்து அசத்திய சென்னை ஜோடி!

நெல்லுக்கு எவ்வளவு நீர் தேவை? தெரியுமா உங்களுக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)